சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் ஆர்வம் உடையவரா நீங்கள்?: இதோ உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள்...
சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் ஆர்வம் உடையவரா நீங்கள்?அப்படியானால் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவக்கூடும்.
நீங்கள் ஐரோப்பிய நாட்டவரா அல்லது ஐரோப்பிய நாட்டவரல்லாதவரா?
சுவிட்சர்லாந்தில் பணி உரிமம் பெறுவதைப் பொருத்தவரை, அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகள் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஒருவர் ஐரோப்பியரா அல்லது ’ஐரோப்பியரல்லாத வெளிநாட்டவரா’ என்பதைப் பொருத்து விதிகள் மாறுபடும்.
நீங்கள் ஐரோப்பியராக இல்லை என்றால், நீங்கள் சுவிட்சர்லாந்தில் பணி செய்வதற்கு உங்களுக்கு ஒரு தனிப்பட்ட வகை பணி உரிமம் தேவை, உங்களுக்கென்று தனியாக ஒரு நிறுவனம் இருந்தால் கூட...
அதே நேரத்தில், ஐரோப்பியர்களுக்கோ, அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழவில்லையென்றால் கூட, அவர்கள் பணி உரிமம் இல்லாமலே சுவிட்சர்லாந்தில் ஆண்டொன்றிற்கு 90 நாட்கள் வேலை செய்ய அனுமதி உண்டு.
(இந்தக் கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத அனைவருக்குமே வெளிநாட்டவர்கள் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
பணி உரிமம் என்பதும் வாழிட உரிமம் என்பதும் வேறு வேறு
பணி உரிமம் என்பது, சுவிட்சர்லாந்தில் பணி செய்வதற்கு உங்களை அனுமதிப்பதற்காக அளிக்கப்படும் உரிமம். அதிலும் கூட, நீங்கள் ஒருவர் கையின் கீழ், அதாவது ஒரு நிறுவனத்தில் பணி செய்கிறீர்களா அல்லது சுய தொழில் செய்கிறீர்களா என்பதற்கேற்ப விதிகள் மாறுபடும்.
அதே நேரத்தில், வாழிட உரிமம் என்பது, நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு அனுமதியளிக்கும் உரிமம் மட்டுமே, அது சுவிட்சர்லாந்தில் பணி செய்வதற்கான அனுமதி அல்ல என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!
முழு நேர மாணவர், சுவிட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர் அல்லது பணி செய்யாமலே ஒருவருக்கு தொடர்ந்து வருமானம் வருமானால், அப்படிப்பட்ட சிலர் மட்டுமே வெறும் வாழிட உரிமத்தால் பலனடையலாம். மற்றவர்களுக்கு பணி உரிமம் அவசியம்.
நீங்கள் பிரித்தானிய குடிமகனா?
நீங்கள் பிரித்தானிய குடிமகனாக இருக்கும் பட்சத்தில், பிரெக்சிட்டுக்கு முன்பே நீங்கள் சுவிட்சர்லாந்தில் பணி செய்ய பணி உரிமம் பெற்றவராக இருந்தால், பிரெக்சிட்டுக்குப் பின்பும், நீங்கள் தொடர்ந்து பணி செய்யலாம், உங்களுக்கு பணி வழங்குபவர் சுவிஸ் நாட்டவராக இருக்கும் பட்சத்தில்...
பிரெக்சிட்டுக்கு முன்பு உங்களிடம் சுவிஸ் வாழிட உரிமமோ பணி உரிமமோ இல்லையென்றால், நீங்களும் ஒரு வெளிநாட்டவராக அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவாராகத்தான் கருதப்படுவீர்கள்.
பணி செய்யாமலே நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ முடியுமா?
சில தரப்பினரால் மட்டும் முடியும்...
ஓய்வு பெற்றவர்கள்
நீங்கள் 55 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து சுவிட்சர்லாந்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருக்கும் பட்சத்தில், அதாவது நீங்கள் முன்பு சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவராகவோ, வழக்கமாக சுவிட்சர்லாந்துக்கு வருபவராகவோ, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு சுவிட்சர்லாந்தில் சொத்து இருந்தாலோ, நீங்கள் வாழிட உரிமம் மட்டும் பெற்று சுவிட்சர்லாந்தில் வாழலாம். ஆனால், உங்கள் தேவைகளுக்காக உங்களிடம் போதுமான பணம் இருப்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும், வருவாய் ஈட்டும் எந்த விடயத்தையும் நீங்கள் செய்யக்கூடாது.
மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு வருபவர்கள்
நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு வரும் பட்சத்தில், நீங்கள் சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் கால கட்டம் வரை செலவிட தேவையான பணம் உங்களிடம் இருக்குமானால், நீங்கள் எப்போது உங்கள் நாட்டுக்கு திரும்புவீர்கள் என்பதும் சரியாக முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், உங்கள் மருத்துவ சிகிச்சை முடியும் வரை நீங்கள் சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கலாம்.
பெருந்தொகை வரி செலுத்துவோர்
சுவிஸ் நாட்டவரல்லாத பெரும்புள்ளிகள், ஒரு பெரும்தொகையை ஆண்டுதோறும் வரியாக செலுத்தினால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழலாம். ஆனால், அவர்கள் அங்கு பணி செய்யக்கூடாது.
சுய தொழில் செய்வோருக்கான பணி அனுமதி
சுய தொழில் செய்வோர் தாங்கள் ஒரு நிறுவனத்தை நிறுவி பணி செய்யும் பட்சத்தில் அல்லது சுவிஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யும்போது அவர்கள் பணி உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் B permit அல்லது C permit வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவர், தன் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ பணி உரிமம் கோரலாமா?
கோரலாம், ஆனால் அதற்கு காலக்கெடு உண்டு.
சுவிட்சர்லாந்தில் B permit அல்லது C permit வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவர், தன் சகோதர சகோதரிகளுக்கோ பெற்றோருக்கோ பணி உரிமம் கோரலாமா?
சுவிஸ் சட்டப்படி முடியாது. ஆனால், அதற்கும் ஒரு விதிவிலக்கு உள்ளது.
உங்கள் பெற்றோர் பல ஆண்டுகளாக உங்களை சார்ந்து வாழும் பட்சத்தில், அவர்களுக்கு சொந்த நாட்டில் வேறு பிள்ளைகள் இல்லை என்றால், அல்லது அவர்கள் சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெறுவது அவசியம் என்றால், அவர்கள் உள்ளூர் மொழி பேசும்பட்சத்தில், அல்லது சுவிட்சர்லாந்துடன் ஏதாவது ஒரு வகையில் சமூக அல்லது பொருளாதார பிணைப்பு கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும்.
மேலதிக விவரங்களுக்கு...
https://www.thelocal.ch/20211206/nine-things-you-need-to-know-about-work-permits-in-switzerland/