உங்களுக்கு சுவிட்சர்லாந்துக்கு குடிபெயரும் திட்டம் உள்ளதா?: அப்படியானால் இந்த ஐந்து விடயங்களை நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்
வெளியே இருந்து பார்க்கும்போது சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற ஒரு அருமையான நாடாகத்தான் தெரியும்.
ஆனால், அப்படிப்பட்ட பெரிய கற்பனைகளுடன் நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்வீர்களானால் சில விடயங்கள் உங்கள் கனவுகளை சிதறடித்துவிடக்கூடும்.
ஆகவே, சில குறிப்பிட்ட விடயங்கள் முறித்து முன்கூட்டியே அறிந்துகொள்வது நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படி ஐந்து முக்கிய விடயங்கள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்...
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லாதீர்கள்
வெளியே இருந்து பார்க்கும்போது சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையின் படங்களுடன் அருமையாகக் காட்சி அளித்தாலும், உண்மை நிலை என்னவோ, அன்றாட வாழ்வில் உங்கள் நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்காது என்பதுதான்...
உங்கள் சராசரி ஊதியத்துடன் ஆடம்பரமாக வாழலாம் என நம்பாதீர்கள்
உங்கள் நாட்டை ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் ஊதியம் அதிகம் இருக்கும் என நீங்கள் எண்ணலாம். அது உண்மையாக இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் விலைவாசி மிக அதிகம் ஆகும். உலகிலேயே மிக அதிக விலைவாசி உள்ள நகரங்களில் ஜெனீவா, சூரிச், பேசல் முதலான சுவிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை கவனத்தில் கொள்வது நலம்.
பொருட்கள், சேவைகள், வீடுகள், மருத்துவக் காப்பீடு மற்றும் பொதுப்போக்குவரத்துக்கான செலவு என அனைத்துமே உங்கள் நாட்டைவிட சுவிட்சர்லாந்தில் அதிகம்!
நீங்கள் சுவிட்சர்லாந்தில் வெளியே சென்று சாப்பிடவேண்டுமானாலோ, பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்கவேண்டுமானாலோ எக்கச்சக்கமாக செலவு செய்யவேண்டியிருக்கும்.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் உள்ள விலைவாசியில், நீங்கள் பணத்தை சேமிப்பதும் கடினம்.
காப்பீடு
சுவிட்சர்லாந்தின் மருத்துவ அமைப்பு உலகில் மிகச்சிறந்த ஒன்றாக அறியப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது விலை மலிவானது அல்ல.
காப்பீட்டைப் பொருத்தவரை சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீடு கட்டாயம், அதற்காக அதிக செலவு செய்யவும் வேண்டியிருக்கும்.
பொதுப்போக்குவரத்து
மற்ற பல சேவைகளைப் போலவே சுவிட்சர்லாந்தில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளும் அதிக செலவு பிடிக்கக்கூடியவை ஆகும்.
ஆனாலும், உங்கள் சொந்த வாகனத்தில் பயணிப்பதை விட, பொதுப்போக்குவரத்துக்கு செலவு குறைவாகத்தான் ஆகும் என்பதையும் மனதில் கொள்ளவும்.
எளிதில் சுவிட்சர்லாந்துடன் அட்ஜஸ்ட் செய்துவிடலாம் என்று எண்ணவேண்டாம்
உங்கள் வருகையை பதிவு செய்வது முதல் குப்பையை மறுசுழற்சி செய்வது, அக்கம் பக்கத்தவர்களுடன் நட்பு பாராட்டுவது வரை உங்கள் நாட்டை ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் வித்தியாசமாக இருக்கும். ஆகவே, எளிதாக சுவிட்சர்லாந்துடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என எண்ணிவிடவேண்டாம்.
ஆக, சுவிட்சர்லாந்துக்கு வரும்போதே இந்த விடயங்கள் குறித்து அறிந்து ஆயத்தமாக வருவீர்களானால், அதிக ஏமாற்றங்களை சந்திக்கவேண்டியது இருக்காது!