கனடாவுக்கு பயணிக்கும் திட்டம் இருக்கிறதா? விதிகள் மாறிவிட்டன: புதிய விதிகள் இதோ...
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்கள் வெளிநாடு சென்றுவிட்டு கனடா திரும்பும்போது இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.
ஆனால், அவர்களுக்கு வேறு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன... Dukovich, அவரது கணவர் Ted Read மற்றும் அவர்களது ஐந்து வயது பேத்தியான Ksenija Callaghan ஆகிய மூவரும் தங்கள் குடும்பத்தினரைக் காண்பதற்காக ஜூன் மாதத்தில் குரோவேஷியாவுக்கு சென்றிருந்தார்கள்.
மீண்டும் ஜூலை 7ஆம் திகதி கனடா திரும்புவதற்காக பாரீஸ் வந்தடைந்தார்கள் அவர்கள். Dukovichம், அவரது கணவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்ததாலும், குழந்தைக்கு ஐந்து வயதே ஆகியிருந்ததாலும், பிரான்சில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆதாரத்தை காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
என்றாலும், அவர்கள் பாரீஸிலிருந்து கனடா செல்வதால் மீண்டும் கொரோனா சோதனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதாவது, கனடாவுக்கு செல்வோர் அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும், அவர்கள் பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை அளித்தாகவேண்டும். இந்த பரிசோதனை ஜூலை 7 வரை இலவசமாக இருந்த நிலையில், தற்போது விதிகள் மாறிவிட்டன.
இனி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலுள்ள நாடுகளுக்குச் செல்வோர் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தியாகவேண்டும்.
கனடாவுக்கு செல்வோர், தங்கள் பயணம் குறித்த தகவல்களை பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெடரல் அரசுக்கு ArriveCAN ஆப் வழியாகவோ இணையத்தில் பதிவு செய்வது மூலமாகவோ தெரியப்படுத்தவேண்டும். அதில், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்தடுப்பூசி பெற்றுக்கொண்டது குறித்த விவரங்களை தனித்தனியே தெரியப்படுத்தவேண்டும்.
கனடாவுக்குள் நுழைந்ததும் என்னென்ன செய்யவேண்டும்?
தகவல்களை இணையத்தில் அப்லோட் செய்ததைத் தொடர்ந்து அந்த விவரங்களளைப் பெற்றுக்கொண்டதற்கு ஆதராமாக ஒரு ரெசீப்ட், மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு வந்து சேரும். அவற்றை கனடாவுக்குள் நுழையும்போது கனேடிய எல்லை பாதுகாப்பு அலுவலரிடம் காட்டவேண்டும்.
குழந்தைகளுடன் பயணித்தல்
ஜூன் 9ஆம் திகதி, பார்சிலோனாவிலிருந்து Shawn Plancke என்ற கனேடியர், தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கனடாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார்.
தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது கனடாவால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கனடா வந்ததும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
விமானம் வாயிலாக வருபவர்கள் அந்த 14 நாட்களில் மூன்று நாட்களை அரசு நியமித்துள்ள ஹொட்டலிலும், மீதி நாட்களை தங்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தலில் செலவிடவேண்டும்.
அதே நேரத்தில், பெற்றோருடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள், தங்கள் பெற்றோருடன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், பெற்றோர் மட்டும் வெளியே செல்லலாம்.
ஆக, Dukovichம் அவரது கணவரும் ஆனாலும் சரி, Shawn Plancke ஆனாலும் சரி, பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படவேண்டும், பெற்றோருக்கோ வெளியில் செல்ல அனுமதி உண்டு என்கின்றன புதிய விதிகள்!
Travellers to Canada are required to use #ArriveCAN to submit their #Covid19 information electronically. This includes travel history and proof of vaccination. You must enter your info within 72 hours before you arrive.https://t.co/duPKWrfMud pic.twitter.com/w5RFdPdJdh
— Health Canada and PHAC (@GovCanHealth) July 16, 2021