உங்கள் உதடுகள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுகிறதா? எப்படி சரி செய்யலாம்?
Skin Care
By Kishanthini
பொதுவாக முகத்தில் கண்களுக்கு அடுத்தபடியாக பலராலும் கவனிக்கப்படக்கூடிய பகுதி உதடுகள்.
வறண்ட, கருமையான உதடுகள் ஒட்டுமொத்த முகப்பொலிவையே குறைக்கும் விதமாக அமையலாம்.
எனவே உதடுகளை பராமரிப்பதும் முக்கியமானது. எனவே இவற்றை எளியமுறையில் போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
WAVEBREAKMEDIA LTD/GETTY IMAGES
- சில துளிகள் எலுமிச்சை சாறுடன், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து லிப் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இந்த கலவையை நன்றாக உதட்டின் மீது தெய்த்து ஸ்க்ரப் செய்த பிறகு, உங்கள் உதடுகளை வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பின்னர் வெது வெதுப்பான நீரைக் கொண்டு உதடுகளை சுத்தப்படுத்தலாம்.
- தினமும் உதடுகள் மீது தேனை தடவலாம். மேலும் சர்க்கரையுடன் தேன் கலந்த கலவையை உதடுகள் மீது தேய்த்து சுத்தப்படுத்தலாம்.
- கற்றாழை ஜெல்லை லிப் மாஸ்க்காக பயன்படுத்தலாம் அல்லது மஞ்சள் தூளுடன் சேர்த்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் உதடுகளில் தடவி, 10 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
- வாஸ்லின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகள் மீது தடவி, அதன் மீது மென்மையான டூத் பிரஷைக் கொண்டு அழுத்தி தேய்க்கவும். சுமார் 5 நிமிடத்திற்கு மேலிருந்து கீழாக வட்ட வடிவில் இதனை செய்யும். இப்போது, உங்கள் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பெட்ரோலியம் ஜெல்லியை மீண்டும் தடவவும். இந்த செயல்முறை உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
- பாதாம் எண்ணெயில் ஸ்க்லரோசண்ட் மற்றும் மென்மையாக்கும் பண்புகள் உள்ளன, அவை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகின்றன. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் அதிகமாக உள்ளது, இது மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளுக்கு சிறந்தது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US