கொடூரமாக தாக்கிய பொலிஸ்! ரசிகர்களின் மண்டை உடைப்பு..பதறிய மெஸ்ஸி (வீடியோ)
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
நிக்கோலஸ் ஒட்டமெண்டி கோல்
ரியோ டி ஜெனிரோவின் Maracana மைதானத்தில் நடந்த போட்டியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் ஆக்ரோஷத்துடன் செயல்பட்டன. இதனால் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை.
எனினும் இரண்டாம் பாதியின் 63வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கோல் கிடைத்தது. கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, அந்த அணியின் நிக்கோலஸ் ஒட்டமெண்டி (Nicolas Otamendi) தலையால் முட்டி கோல் மிரட்டலாக அடித்தார்.
அதுவே அர்ஜென்டினாவில் வெற்றி கோலாக மாறியது. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ஜோலிண்டன் (Joelinton) அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டார்.
இதனால் அவருக்கு உடனடியாக சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இறுதியில் அர்ஜென்டினா அணி 1-0 என வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
மோசமான தடியடி
இந்தப் போட்டியில் ஸ்டாண்டில் இருந்த அர்ஜென்டினா, பிரேசில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பிரேசிலிய பொலிஸார் அர்ஜென்டினா ரசிகர்கள் மீது மோசமான தடியடி தாக்குதலை நடத்தினர்.
இதில் ஒருவருக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக மெஸ்ஸி பதறிப்போனார்.
உடனே அர்ஜென்டினா வீரர்கள் அருகில் இருந்து ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |