காயத்தால் அமர்ந்திருந்த மெஸ்ஸி, இரட்டை கோல் அடித்த வீரர்! Copa Americaவில் காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா 2024யில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது.
மெஸ்ஸி
Hard Rock மைதானத்தில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா (Argentina) அணியை எதிர்கொண்டது பெரு (Peru).
காயத்தினால் மெஸ்ஸி அமர்ந்திருக்க, அர்ஜென்டினா அணி சாதிக்குமா என்ற கேள்வி நிலவிய சூழலில் பெருவிற்கு எதிராக வீரர்கள் களமிறங்கினர்.
மார்டினஸ் மிரட்டல்
முதல் பாதியில் கோல் விழாத நிலையில், 47வது நிமிடத்தில் லாடரோ மார்டினஸ் (Lautaro Martinez) மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 86வது நிமிடத்தில் பெருவின் இரு வீரர்களை சமாளித்து பந்தை விரட்டி சென்ற மார்டினஸ், கோல் கீப்பர் நெருங்கிபோது பந்தை உயர தூக்கி கோலாக மாற்றினார்.
இதன்மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |