சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்..சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்
FIFA காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.
அலிஸ்டர் கோல்
கான்சாஸ் சிட்டியில் நடந்த காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அலிஸ்டர் கோல் அடித்தார். அதன் பின்னர் 67வது நிமிடத்தில் சுவிஸின் Dan Ndoye கோல் அடித்தார்.
90 நிமிடங்கள் வரை போட்டி 1-1 என சமனில் இருந்ததால், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை என்பதால், மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஸும், 120+1வது நிமிடத்தில் மார்டினஸும் கோல்கள் அடித்தனர்.
அர்ஜென்டினா வெற்றி
சுவிட்சர்லாந்து அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் பல வாய்ப்புகளை தவறவிட்ட மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
வருகிற 16ஆம் திகதி அட்லாண்டாவில் நடைபெற அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |