மெஸ்ஸிக்கு விசுவாசம் காட்டவேண்டாமா? ரொனால்டோ டாட்டூ குத்திய அர்ஜென்டினா வீராங்கனை மீது விமர்சனம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவை பச்சை குத்தியதற்காக அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண்கள் கால்பந்து வீராங்கனை யமிலா ரோட்ரிக்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளானார்.
காலில் ரொனால்டோவை பச்சை குத்திய வீராங்கனை
அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
யாமிலா ரோட்ரிக்ஸ் தனது காலில் மறைந்த அர்ஜென்டினா ஜாம்பவான் டியாகோ மரடோனா மற்றும் ரொனால்டோவின் படங்களை பச்சை குத்தியுள்ளார்.
எந்தச் சட்டமும் இல்லை
இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், "தேசிய அணியில் மெஸ்ஸி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் (Idol) என்று நான் கூறுவதால், நான் மெஸ்ஸியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை," என்று அவர் கூறினார்.
AFP
"நான் எப்போது மெஸ்ஸிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள், நான் மிகவும் கடினமான நேரத்தைச் சந்திக்கிறேன், நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை," என்று யமிலா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Yamila Rodríguez, Argentinian women’s football team, Argentina player Yamila Rodríguez, Cristiano Ronaldo tattoo, Diego Maradona tattoo, Argentina Captain Lionel Messi