ஃபிபா கால்பந்து தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தை பிடித்த அணி எது தெரியுமா?
உலக கால்பந்து அணிகளின் பட்டியலில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி மீண்டும் முத்லிடத்தைப் பிடித்துள்ளது.
மீண்டும் முதலிடம்
கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் தரவரிசைப்பட்டியலில் அர்ஜென்டினா அணியின் புள்ளிகள் உயர்ந்தது. இந்த நிலையில் ஃபிபா வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்து அர்ஜென்டினா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
@Getty
@Getty
சரிந்த அணிகள்
மூன்றாவது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி 2வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், முதலிடத்தில் இருந்த பிரேசில் அணி 3வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
அதேபோல் இரண்டாவது இடத்தில் இருந்த பெல்ஜியம் 4வது இடத்திற்கு இறங்கியுள்ளது. இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலேயே நீடிக்கிறது.
@Getty Images
மேலும் நெதர்லாந்து, குரோஷியா அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், உலகக்கோப்பையில் விளையாடாத இத்தாலி 7யில் இருந்து 8வது இடத்திற்கு சரிந்துள்ளது.
நான்கு முறை சாம்பியன் ஆன ஜேர்மனி அணி 11வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கு சரிந்துள்ளது.
டாப் 10 அணிகள்:
- அர்ஜென்டினா
- பிரான்ஸ்
- பிரேசில்
- பெல்ஜியம்
- இங்கிலாந்து
- நெதர்லாந்து
- குரோஷியா
- இத்தாலி
- போர்த்துக்கல்
- ஸ்பெயின்