இந்தியா வந்ததன் மூலம் கனவு நனவாகிவிட்டது! தங்க கையுறை வென்ற அர்ஜென்டினா வீரர் நெகிழ்ச்சி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கோல் கீப்பர் எமிலினோ மார்டினெஸ், இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தங்க கையுறை வீரர்
கடந்த ஆண்டு நடந்த பிபா கால்பந்து தொடரில், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
அந்த அணியின் கோல் கீப்பர் எமிலினோ மார்டினெஸ் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை வென்றார்.
Kolkata ?????❤️ pic.twitter.com/ayKiMdaCnI
— Emi Martínez (@emimartinezz1) July 6, 2023
ரசிகர்களுடன் புகைப்படம்
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மார்டினெஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் ரசிகர்களுடன் உற்சாகமாக மார்டினெஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் மக்கள், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் எமிலினோ மார்டினெஸ் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |