பிரித்தானியர்களை இழிவுபடுத்தும் விதமாக.. உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய அர்ஜென்டினா வீரர்கள்! சர்ச்சை வீடியோ
உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணியினர், பிரித்தானியர்களை இழிவுபடுத்தும் விதமாக பாடல் பாடி கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதி வெற்றி
கத்தாரில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா, 18ஆம் திகதி நடக்கும் போட்டியில் மொராக்கோ அல்லது பிரான்ஸை எதிர்கொள்ளும்.
பிரித்தானியர்களை இழிவுபடுத்தும் பாடல்
இந்த நிலையில், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் தங்கள் அறையில் சட்டைகளை கழற்றிவிட்டு பாடல் பாடி மகிழ்ந்தனர்.
ஆனால், பிரித்தானியாவை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் பாடல் அமைந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஃபாக்லாண்ட்ஸ் போர்
அதாவது ஃபாக்லாண்ட்ஸ் போரை குறிப்பிட்டு அந்த வரிகள் இருந்தன. 1833ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய கடல்பிரதேசமாக ஃபாக்லாண்ட்ஸ் இருந்தபோதிலும், அர்ஜென்டினா அதன் மீது இறையாண்மையைக் கோருகிறது.
பிரித்தானியா 1816ஆம் ஆண்டில் ஸ்பெயினிடம் இருந்து ஃபாக்லாண்ட்ஸை பிரித்தானியா தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு முன் அர்ஜென்டினா அதனை வாங்கியதாக கூறுகிறது.
அதன் பின்னர் 1982ஆம் ஆண்டு ஃபாக்லாண்ட்ஸ் தீவு மீது அர்ஜென்டினா படையெடுத்தது. ஆனாலும் அந்த தீவு மீண்டும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இதன் காரணமாக அர்ஜென்டினா ரசிகர்கள் கத்தாரில் பிரித்தானியா மற்றம் ஃபாக்லாண்ட்ஸ் இரண்டையும் குறிப்பிடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் தான் அர்ஜென்டினா வீரர்கள் அதே போன்ற வேறொரு பாடலை பாடி கொண்டாடியுள்ளனர்.
அவர்களது பாடல் வரிகளில், 'உலக சாம்பியனாக வேண்டும் என்ற கனவு எங்களுக்கு உள்ளது. நான் அர்ஜென்டினியன் . ஃபாக்லாண்ட்ஸில் கேவலமான ஆங்கிலம் உள்ளது, அதை நான் மறக்கவில்லை. நான் உங்களை ஊக்குவிக்கிறேன், அர்ஜென்டினாவை எல்லா இடங்களிலும் பின்பற்றுகிறேன்' என உள்ளது.
வீரர்கள் இவ்வாறு வெற்றியை கொண்டாடும் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.