28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை தட்டிச்சென்ற மெஸ்ஸி அணி: கதறி அழுத நெய்மர்
28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது அர்ஜென்டினா அணி.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நடைபெற்று வந்தது.
10 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் அர்ஜெண்டினா அணி கொலம்பியாவையும், பிரேசில் அணி பெருவையும் வீழ்த்தின.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, நடப்பு சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது.
#CopaAmérica ?
— Copa América (@CopaAmerica) July 11, 2021
¡Como para no celebrar así! @Argentina volvió a levantar la CONMEBOL #CopaAmérica de la mano de Lionel Messi ? y se festejó con todo ?
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/4ps25RHfMy
பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது.
எனினும், 22-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது.
2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
எனினும், ஆர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை.
இதன்மூலம், ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை.
ஆர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இதுவாகும்.
சொந்த மண்ணில் தோல்வியால் பிரேசில் வீரர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோலும் அடிக்க முடியாத விரத்தியில் கண்ணீருடன் அரங்கில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.