குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபெறும் ஒரே இந்தியரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்
2022ல் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஒரே ஒரு இந்தியர் ஆரிப் கான்.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான பணிகள் மும்மரமாக நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார் காஷ்மீரின் Hajibal Tangmarg என்ற பகுதியை சேர்ந்த ஆரிப் கான்.
சிறுவயது முதலே பனிச்சறுக்கில் ஆர்வம் கொண்ட இவர், 2005ம் ஆண்டு Gulmarg என்ற பகுதியில் தனது பனிச்சறுக்கு பயணத்தை தொடங்கியுள்ளார்.
2008ம் ஆண்டு முதல் தொழில்முறை பனிச்சறுக்கு வீரர் ஆனார். அதனை தொடர்ந்து உள்ளூர் மட்டும் வெளிநாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.
இதுவரை 127 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ளவர், நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.
டுபாயில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டதை அடுத்து, சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கிற்க்கு ஆரிப் கான் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து ஆரிப் கான் கூறுகையில், தனக்கு உறுதுணையாக இருந்த தனது தந்தைக்கு மிக்க நன்றி எனவும், என்னுடைய மற்றும் என் தந்தையின் கனவு இப்பொது நிறைவேறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எனது இந்த பயணத்திற்கு தொடக்கமாக இருந்த Gulmarg பகுதிக்கும், அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் மற்றும் எனக்கு பொருளாதார உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சிப்பட தெரிவித்தார்.
இந்த பயணத்தில் இந்திய அரசு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.