தோனி பாதங்களை தொட்டு வணங்கிய பாடகர் அர்ஜித் சிங் - வைரலாகும் வீடியோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் பாதங்களை தொட்டு வணங்கிய பாடகர் அர்ஜித் சிங் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நேற்று முதல் மே 28-ம் திகதி வரை நடக்க உள்ளது.
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதல் போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் திருவிழாவை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மந்திரா பேடி தொகுத்து வழங்கினார்.
தோனியின் பாதங்களை தொட்டு வணங்கிய அர்ஜித் சிங்
இதனையடுத்து, முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இவர் ராஸி படத்தில் தான் பாடிய Ae Vatan என்ற பாடலை பாடி அசத்தினார்.
அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியை மைதானத்தில் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், பிரதிநிதிகளும் கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பாதங்களை தொட்டி வணங்கினார் பாடகர் அர்ஜித் சிங். அவரை கட்டிப் பிடித்து தடவிக் கொடுத்தார் தோனி.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Yesterday Highlight
— ?️?? ??? ᴀꜱ ʟᴏᴠᴇʀ?️ (@EL_Roy_AS) April 1, 2023
ARIJIT SINGH × MS DHONI #IPLonJioCinema #ArijitSingh #MSDhoni pic.twitter.com/CfloE64eTJ
Arijit Singh touched MS Dhoni's feet during IPL 2023 opening ceremony. pic.twitter.com/8DeX3mRb9N
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2023
Arijit Singh paid his respects to the Indian legend MS Dhoni..
— Sanjeevchandel (@Sanjivchandel0) March 31, 2023
#IPL2023OpeningCeremony #bhojpuri #JioCinema #MSDhoni #ipl2023 Arijit Singh #dream11 pic.twitter.com/UXzHqoQdxE