குழந்தைகள் விரும்பி உண்ணும் மொறுமொறு தட்டை.., இலகுவாக செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது தட்டை, முறுக்கு தான்.
அந்தவகையில், மொறுமொறு அரிசி தட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- இஞ்சி- 2 துண்டு
- பச்சைமிளகாய்- 3
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த கலவை, ஊறவைத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், வெள்ளை எள்ளு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிணைந்து வைத்து மாவை வட்டமாக தட்டி மிதனமான தீயில் பொன்னிறமாக வறுத்தால் சுவையான மொறுமொறு தட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |