வெளிநாட்டு காதலரை திருமணம் செய்ய உள்ள அர்ஜுன் மகள் அஞ்சனா
நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர்.
இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், பட்டத்து யானை, சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அஞ்சனா அர்ஜுன்
ஐஸ்வர்யா அர்ஜுனும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்தனர்.
இவர்களின் திருமணம் இரு குடும்பத்தாரின் முன்னிலையில், கடந்த ஜூன் 10 ம் தேதி அர்ஜுன் கட்டிய ஆஞ்சிநேயர் கோவிலில் வைத்து நடைபெற்றது.
தற்போது அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனாவின் நிச்சயதார்த்தம், இத்தாலியில் நடைபெற்றுள்ளது. இவர்களின் புகைப்படத்தை அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஞ்சனா அர்ஜுன், பழங்களின் தோல், காய்கறி நார் ஆகியவற்றை கொண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
வெளிநாட்டு காதலர்
ஐசையா நட்டரும் அஞ்சனாவும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஐசையா நட்டர்(Isaiah Nutter) தனது கல்லூரி படிப்பை நியூயார்க் பல்கலைகழகத்தில் படித்துள்ளார்.
ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமணத்திலும், ஐசையா நட்டர் கலந்து கொண்டிருந்தார். விரைவில் அஞ்சனாவின் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |