53 வயதில் பிரபல நடிகர் இரண்டாவது திருமணம்
Arjun Rampal knot with partner: பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்.
பிரபல இந்தி திரைப்பட நடிகர் அர்ஜுன் ராம்பால், தனது காதலியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
அர்ஜுன் ராம்பால்
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் ராம்பால் (53). இவர் துரந்தர் 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அர்ஜுன் ராம்பால் தனது மனைவி மெஹர் ஜெசியாவை 2019-ஆம் ஆண்டில் விவாகரத்து மூலம் பிரிந்தார். கேப்ரியல்லா டெமெட்ரியட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்த அர்ஜுன் ராம்பால், அவருடன் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு கேப்ரியல்லாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் அர்ஜுன் ராம்பால். இந்த நிலையில், அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.

இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
பதிவுத்திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால், கேப்ரியல்லா ஜோடி தங்களது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் எந்தவொரு புகைப்படத்தையும், அறிவிப்பையும் வெளியிடவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |