மும்பை இந்தியன்ஸ் டீம்ல சச்சின் மகனுக்கு யாரை பிடிக்கும் தெரியுமா? - அவரே சொன்ன பதில்
மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கு யாரை பிடிக்கும் என அர்ஜூன் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார்.
2021 ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியால் அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அர்ஜூன் காயம் காரணமாக பாதி தொடரில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் அவருக்கு பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜஸ்பிரித் பும்ரா தான் மிகவும் பிடித்த வீரர் என அர்ஜூன் பதிலளித்தார். பும்ராவை தான் நடப்பு ஐபிஎல் தொடரில் ரூ.12 கோடிக்கு மும்பை அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.