சிக்ஸர் மழையில் 66 ரன் விளாசிய அர்ஜுன் டெண்டுல்கர்: 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன்
டி20 மும்பை லீக் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 34 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.
அர்ஜுன் டெண்டுல்கர் மிரட்டல்
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 மும்பை தொடர் போட்டியில் ARCS அந்தேரி மற்றும் பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஓம் கேஸ்காமத் 49 (36) ஓட்டங்களும், சாகர் சாப்ரியா 44 (23) ஓட்டங்களும் விளாசினர்.
அபாரமாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ப்ரசூன் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
66 ஓட்டங்கள் விளாசல்
பின்னர் களமிறங்கிய ARCS அந்தேரி அணி 13.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவம் ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார். முஷீர் கான் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 66 ஓட்டங்கள் குவித்த அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |