48 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: அடித்து நொறுக்கிய இருவர்
விஜய் ஹஸாரே தொடரில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது.
கோவா ஆல்அவுட்
கோவா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.

முதலில் ஆடிய கோவா அணி 33.3 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பிரபுதேசாய் 66 (43) ஓட்டங்களும், லலித் யாதவ் 54 (59) ஓட்டங்களும் எடுத்தனர். மார்கண்டே 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், சுக்தீப் மற்றும் க்ரிஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹர்னூர் சிங் (Harnoor Singh) 90 பந்துகளில் 94 ஓட்டங்களும், நமன் திர் (Naman Dhir) 65 பந்துகளில் 68 ஓட்டங்களும் விளாசினர்.
துடுப்பாட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar), 6 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை கொடுத்தார்.
Pic:onecricket/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |