முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்: குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
நீண்ட காத்திருப்புக்கு பிறகு ஐபிஎல்-லின் முதல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார்.
மும்பை-கொல்கத்தா அணிகள் மோதல்
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் 22வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 186 ஓட்டங்கள் கொல்கத்தா அணி இலக்காக நிர்ணயித்தது நிலையில், அதனை 17.4 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி அடைந்தது.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்
இதற்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார்.
கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
? A special occasion ? ?
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
That moment when Arjun Tendulkar received his @mipaltan cap from @ImRo45 ? ?
Follow the match ▶️ https://t.co/CcXVDhfzmi#TATAIPL | #MIvKKR pic.twitter.com/cmH6jMJRxg
இந்நிலையில் நீண்ட காத்திருப்புக்கு பிறகு, அவரது ஐபிஎல்-லின் முதல் போட்டியில் இன்று களமிறங்கினார்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொப்பியை வழங்கி விளையாடும் அணிக்குள் வரவேற்றார். உடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பு ஆலோசகரான சச்சின் டெண்டுல்கரும் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசும் வாய்ப்பு அர்ஜுன் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
Congratulations to Arjun Tendulkar on his debut match today! Best of luck to him as he steps onto the field, showcasing his skills and carving his own path. ?#KKRvsMI pic.twitter.com/0QmkrrD40H
— Suresh Raina?? (@ImRaina) April 16, 2023
மொத்தம் 2 ஓவர்கள் வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
இதற்கு மத்தியில், ஐபிஎல்-லில் முதல் போட்டியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, கங்குலி ஆகிய முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.