தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா
விஜய் ஹஸாரே தொடர் போட்டியில் உத்தரகாண்ட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது.
ஸ்நேஹல் கௌதங்கர் சதம்
முதலில் ஆடிய கோவா அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் 8 (16) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அஸான் தோடா 34 ஓட்டங்கள் எடுத்தார்.

எனினும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்நேஹல் கௌதங்கர் சதம் விளாச, கோவா அணி 49.1 ஓவரில் 270 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அபினவ் தேஜ்ரானா 61 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார். அபய் நேகி, சுசித் தலா 3 விக்கெட்டுகளும், தேவேந்திர சிங் மற்றும் மயங்க் மிஷ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய உத்தரகாண்ட் அணியில் யுவராஜ் 3 ஓட்டங்களில் வெளியேற பிரியன்சு 44 (58) ஓட்டங்களும், குணால் 33 (54) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்
ஷஷ்வத் டங்வால் மற்றும் ஆஞ்சநேயா சூர்யவன்ஷி இருவரும் அதிரடி ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணியை 47வது ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.
ஆஞ்சநேயா சூர்யவன்ஷி (Aanjaneya Suryavanshi) 87 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்களும், ஷஷ்வத் டங்வால் (Shashwat Dangwal) 70 பந்துகளில் 70 ஓட்டங்களும் விளாசினர். வாசுகி கௌஷிக், தர்ஷன் மற்றும் ஷுபம் தேசாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
துடுப்பாட்டத்தில் சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர், 8 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |