பிரித்வி ஷாவின் விக்கெட்டை தூக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்: சதமடித்த வீரர்..போராடும் கோவா
ரஞ்சிக் கிண்ணத் தொடர் போட்டியில் கோவா அணி 50 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
அர்ஜுன் டெண்டுல்கர்
கோவா, மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கிண்ணத் தொடர் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
X
முதலில் இன்னிங்ஸில் கோவா 209 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆக, மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
அர்ஷின் 7 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியாக ஆடிய பிரித்வி ஷாவின் விக்கெட்டை (31) அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்தினார்.
பின்னர் நீரஜ் (23), அங்கித் (22) ஆட்டமிழக்க, அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 66 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
X
சௌரப் நாவலே 105 ஓட்டங்கள்
நிதானமாக ஆடிய சௌரப் நாவலே 15 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து 22 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜல்ஜின் விக்கெட்டையும் அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பற்றினார்.
விக்கி ஒஸ்ட்வால் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுக்க, மகாராஷ்டிரா அணி 350 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
லலித் யாதவ் 4 விக்கெட்டுகளும், வாசுகி கௌஷிக் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ராணா (Abhinav Tejrana) சதம் விளாச, 50 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |