ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்: கோவா அபார வெற்றி!
டாக்டர் (கேப்டன்) கே திம்மப்பையா நினைவு போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அர்ஜுன் டெண்டுல்கர்
KSCA Invitational தொடரில் கோவா மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் ச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 26.3 ஓவர்களில் 87 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் KSCA தொடரில் கோவா அணி, கர்நாடக அணியை 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் இதுவரை 68 விக்கெட்டுகள்
இந்த போட்டியில் சிறப்பான செயல்திறனை காட்சிப்படுத்திய அர்ஜுன் டெண்டுல்கர், வரும் முதல்-வகுப்பு சீசனுக்கு தயாராகியுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை மூன்று வடிவங்களில் 49 போட்டிகள் விளையாடி, 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல்-வகுப்பு கிரிக்கெட்டில், 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |