பேட்ஸ்மேன்களை கதறவிட்ட சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்! விக்கெட்களை அள்ளிய வீடியோ
சையத் முஷ்டாக் அலி போட்டியில் சச்சின் டெண்டுகரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது பந்துவீச்சின் மூலம் எதிரணியை திணறடித்தார்.
கோவா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெறும் 10 ரன்களை மட்டும் கொடுத்து அர்ஜூன் 4 விக்கெட்களை அள்ளினார். டி20 போட்டிகளில் அவரின் சிறந்த பந்துவீச்சு இதுவாகும், எப்படியிருந்தாலும் அர்ஜூனின் முயற்சிகள் வீண் போனது.
ஏனெனில் இப்போட்டியில் அர்ஜூன் சார்ந்திருந்த கோவா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சியை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
4⃣ overs
— BCCI Domestic (@BCCIdomestic) October 14, 2022
1⃣0⃣ runs
4⃣ wickets
Arjun Tendulkar scalped a fantastic four-wicket haul for Goa against Hyderabad ?
Watch the left-arm pacer’s bowling spell here??https://t.co/Nauq12ZL0f#GOAvHYD | #SyedMushtaqAliT20 | @mastercardindia pic.twitter.com/eAqNI6BbUP
அந்த பதிவில், 4 ஓவர்கள், 10 ரன்கள், 4 விக்கெட்டுகள். ஹைதராபாத் அணிக்கு எதிராக கோவா அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.