ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரின் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர்! வைரல் வீடியோ
ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷனை வலைபயிற்சியின் போது யார்க்கர் பந்தில் அர்ஜுன் டெண்டுல்கர் க்ளீன் போல்ட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியால் இஷான் கிஷன் ரூ 15.25 கோடிக்கு வாங்கப்பட்டார், இந்தாண்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் இவர் தான்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியால் ரூ 30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
You ain't missing the ? if your name is ?ℝ??ℕ! ?#OneFamily #DilKholKe #MumbaiIndians MI TV pic.twitter.com/P5eTfp47mG
— Mumbai Indians (@mipaltan) April 20, 2022
இந்த சூழலில் வலைபயிற்சியின் போது கிஷனுக்கு அர்ஜுன் பந்துவீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது, இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அர்ஜுனுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.