ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்
ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் பரபரப்பு
ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காரில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் வானை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டது உடன், எரிந்து கொண்டு இருந்த 2 பாட்டில்களையும் விமான நிலைய வளாகத்திற்குள் தூக்கி எறிந்தார்.
dpa via AP
இதனால் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
பொலிஸார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அவசர விசாரணையை தொடங்கினர். அதில், விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு மர்ம நபரின் கார் உள்ளே வந்ததையும், காரில் 2 குழந்தைகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
மர்ம நபர் விமான நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக 2 குழந்தைகளை கடத்தி செல்வதாக அவருடைய மனைவியே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
dpa via AP
மர்ம நபரின் இந்த திடீர் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அனைத்து முனையங்களின் நுழைவு வாயில்களுக்கும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன.
மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை... Chennai -க்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் செல்வகுமார் பேட்டி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |