வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஆயுததாரிகளான பொலிஸ்: பிரித்தானியாவில் பகீர் சம்பவம்
பிரித்தானியாவின் டோர்செட் பகுதியில் குடியிருப்பு ஒன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஆயுததாரிகளான பொலிசார் கண்ட காட்சி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோர்செட் பகுதியில் குடியிருக்கும் நபர் தொடர்பில் உறவினர்கள் கவலை தெரிவித்ததை அடுத்து அப்பகுதி பொலிசார் நேரடியாக விசாரிக்க சென்றுள்ளனர். சம்பவத்தின் கெளரம் கருதி ஆயுததாரிகளான பொலிசார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.53 மணியளவில் குறித்த குடியிருப்பை நெருங்கிய பொலிசார், மூடப்பட்டிருந்த கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். அங்கே, 30 வயது கடந்த ஆண் ஒருவர் படுகாயத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் தொடர்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர் இறந்த தகவலும் பகிரப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 8 பொலிஸ் வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் சேவையும், பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
6 பேர் கொண்ட ஆயுததாரிகளான பொலிசாரே, பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். திடீரென்று பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று அப்பகுதியில் வட்டமிட்டதுடன், குடியிருப்பு ஒன்றின் மேலே பறந்து நின்றதாகவும், அந்த வேளை ஆயுததாரிகளான பொலிசார், அந்த குடியிருப்பினுள் நுழைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதி மக்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.