பிரித்தானியா ரயில் நிலையத்தை கதிகலங்க வைத்த இளைஞர்.. ஆயுதங்களுடன் குவிந்த பொலிஸ்!
பிரித்தானியா ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரையும் அவருடன் இருந்த நண்பர்களையும் ஆயுதமேந்திய பொலிசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரில் உள்ள விக்டோரிய ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் அளித்த தகவலின் படி, அகஸ்ட் 20ம் திகதி மாலை 5.15 மணிக்கு மான்செஸ்டர் விக்கேடாரிய ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக அழைப்பு வந்தது.
உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த ஆயதமேந்திய பொலிசார், துப்பாக்கி வைத்திருந்த நபரையும், அவருடன் இருந்த நண்பரக்ளையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
துப்பாக்கி வைத்திருந்த 17 வயது இளைஞனை பொலிசார் கைது செய்தனர் மற்றும் அவரிடமிருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளர்.
துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அது பலூன்களை சுட பயன்படுத்தப்படும் BB துப்பாக்கி எனவும், இதனால், பெரியளவில் ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.
எனினும், வன்முறை பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடரில் அவரிடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் தெரிவித்துள்ளது.