லண்டனில் பிரபல வீதியில் குவிந்த ஆயுதமேந்திய பொலிசார்! தெரியவந்த உண்மை காரணம்
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் வலம் வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு ஆயுதமேந்திய பொலிசார் குவிந்தனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Oxford வீதியில் உள்ள கடை ஒன்றில், மர்ம நபர் கத்தியுடன் வலம் வருவதாக பொலிசாருக்கு, இன்று பிற்பகல் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கிருக்கும் Marks & Spencer-ல் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின் ஆயுதமேந்திய பொலிசார் அங்கு வந்து சோதனை செய்த போது, எந்த ஒரு நபரும் சிக்கவில்லை.
இதையடுத்து அப்பகுதியில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் கூறினர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே குறித்த கடையில்(Marks & Spencer) இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அதன் பின் கடை வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
Picture: Faisal Amjad
இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த நபர் கூறுகையில், குறித்த கடை முன்பு கத்தியுடன் சண்டை நடந்த பின்னரே ஆயுதமேந்திய பொலிசார் இங்கு விரைந்தனர்.
யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.