விமானத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட தம்பதி... பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதமேந்திய பொலிசார் அதிரடியாக நுழைந்து விமானத்தில் வைத்தே சிறுமி சாராவின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயாரை கைது செய்துள்ளனர்.
விமானத்தில் வைத்து
சிறுமி சாரா கொல்லப்பட்ட வழக்கில் ஷெரீப் மற்றும் பதூல் தம்பதி குற்றவாளி என நீதிமன்றத்தால் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாலிக் என்ற உறவினர் சிறுமியின் மரணத்திற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
10 வயதேயான சிறுமி சாரா பல ஆண்டுகள் நீடித்த துன்புறுத்தல்களுக்கு பின்னர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் மூவர் மீதான தீர்ப்பை நீதிமன்ற அறிவித்ததை அடுத்து, 2023 செப்டம்பர் 13ம் திகதி இந்த மூவரும் விமானத்தில் வைத்து கைதான காட்சிகளை முதன்முறையாக பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சிறுமி கொலைக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டுக்குத் தப்பிய மூவரும், 5 வாரங்கள் தலைமறைவாக இருந்த பின்னர் லண்டன் திரும்பிய நிலையிலேயே கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
உடல் முழுவதும் 71 காயங்கள்
கைவிலங்கிடப்பட்டு மூவரும் விமானத்தில் இருந்து அழைத்துச் செல்லபப்டும் காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர். சர்ரே பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 10ம் திகதி சிறுமி சாரா சடலமாக மீட்கப்பட்டார்.
பாகிஸ்தானில் இருந்து ஷெரீப் லண்டன் பொலிசாருக்கு அளித்த தகவலை அடுத்தே, சடலத்தை மீட்டுள்ளனர். சிறுமி சாராவின் உடல் முழுவதும் 71 காயங்கள் காணப்பட்டுள்ளது. இதில் தந்தை மற்றும் வளர்ப்பு தாயார் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை தண்டனை வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |