பாரிஸ் நகரில் துணிகர சம்பவம்: பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகள் மாயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நகைக்கடை ஒன்றை கொள்ளையிட்ட ஆயுதம் ஏந்திய குழு ஒன்று, சுமார் 10ல் இருந்து 15 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளுடன் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Piaget நகைக்கடை
தொடர்புடைய கொள்ளை சம்பவமானது பட்டப்பகலில் rue de la Paix வீதியில் உள்ள Piaget நகைக்கடையிலேயே நடந்துள்ளது. ஆடம்பர பொருட்கள் மற்றும் வகை வகையான நகைகளுக்கு பெயர்போன கடை இதுவென கூறுகின்றனர்.
@reuters
இதனாலையே, சமீப ஆண்டுகளில் இந்த வீதிகளில் உள்ள கடைகள் ஆயுதம் ஏந்திய குழுக்களால் கொள்ளையிடப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை துவங்கியுள்ளனர்.
மேலும், இந்த கொள்ளையில் மூவர் மீது சந்தேகம் இருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்தில் எவரும் தாக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
ஆயுதம் ஏந்திய குழு ஒன்று
கடந்த ஆண்டு மே மாதம் இதுபோன்று ஒரு ஆடம்பர நகைக்கடையை ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கொள்ளையிட்டு தப்பியது. Bulgari மற்றும் Chaumet கடைகளும் சமீப ஆண்டுகளில் கொள்ளையில் சிக்கியுள்ளது.
@reuters
தற்போது பாரிஸ் நகரில் கொள்ளையிடப்பட்ட Piaget என்ற கடையானது சுவிஸ் ஆடம்பர கைக்கரிகாரம் விற்கப்படும் கடையாகும். இங்கு ஆடம்பர நகைகளும் விற்கப்படுகிறது. மேலும் Piaget கைக்கடிகாரங்களுக்கு பல ஆயிரக்கணக்கான யூரோக்கள் பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |