பிரித்தானியாவில் பட்டப்பகலில் ஆயுதங்களுடன் கொள்ளையடித்த நபர்கள்: அதிரவைத்த காட்சி
பிரித்தானிய நகரமொன்றில், பட்டப்பகலில் கொள்ளையர்கள் சிலர் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்
இங்கிலாந்திலுள்ள Leeds நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில், சற்றும் பயமில்லாமல் சில முகமூடிக் கொள்ளையர்கள் நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
(Image: Megan Banner)
இரவில் யாருக்கும் தெரியாமல் திருடியதெல்லாம் போய், இப்போது பட்டப்பகலிலேயே திருடத் துவங்கியுள்ளார்கள் திருடர்கள். அதுவும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள தெரு ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
[(Image: Megan Banner)]
leeds
மக்களை அதிரவைத்த காட்சி
மக்கள் கூடி நிற்க, கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், ஆயுதங்களைக் கொண்டு நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து, நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு நிதானமாக தாங்கள் வந்த கார்களில் ஏறிச் செல்வதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள்.
அந்தக் காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
Further evidence of increasingly brazen theft occurring around the world: daylight robbery in Leeds, ?? UK ?
— Bitcoin News (@BitcoinNewsCom) June 12, 2023
pic.twitter.com/9fldRH2upc
இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக West Yorkshire பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |