இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை... பிரித்தானியாவை நீதிமன்றத்திற்கு இழுக்கும் மனித உரிமைக் குழுக்கள்
காஸாவில் போர் நடக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு போர் விமான பாகங்களை வழங்குவதன் மூலம் சர்வதேச சட்டத்தை பிரித்தானியா மீறியுள்ளதாக மனித உரிமைகள் குழுக்களும் அரசு சாரா நிறுவனங்களும் குற்றம் சாட்டியுள்ளன.
அல்-ஹக் முயற்சி
பிரித்தானியா அரசாங்கத்திற்கு எதிராக இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் குழுக்களும் அரசு சாரா நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
லாக்ஹீட் மார்ட்டின் F-35 போர் விமானங்களுக்கான பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை அரசாங்கம் ஏற்றுமதி செய்வதை நிறுத்த பாலஸ்தீனிய உரிமைகள் சங்கமான அல்-ஹக் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அம்னஸ்டி, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆக்ஸ்பாம் மற்றும் பிறவற்றால் அல்-ஹக் முன்னெடுக்கும் இந்த முயற்சி ஆதரிக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் மேற்குக் கரையில் பேரழிவு தரும் வகையில் இஸ்ரேல் அமெரிக்க போர் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது.
மேலும், இஸ்ரேலுக்கு முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், இனப்படுகொலையைத் தடுக்கும் அதன் சட்டப்பூர்வ கடமையை பிரித்தானியா நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்று பிரித்தானியாவின் அம்னஸ்டி தலைவர் கூறியுள்ளார்.
F-35 போர் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதி, லேசர் இலக்கு அமைப்பு, டயர்கள், பின்புற உடற்பகுதி, விசிறி உந்துவிசை அமைப்பு மற்றும் எஜெக்டர் இருக்கை அனைத்தும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதில் பல்வேறு சிக்கல்
பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் இல்லை என்றால், அந்த விமானம் பறக்க வாய்ப்பில்லை என்றே அல்-ஹக் வழக்கை ஆதரிக்கும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
டிசம்பர் 2023 மற்றும் ஏப்ரல், மே 2024 இல் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையைத் தொடர பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்ததாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சர்வதேச மனிதாபிமான சட்டத்துடன் இஸ்ரேலின் இணக்கத்தை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து புதிய லேபர் அரசாங்கம் சுமார் 30 உரிமங்களை இடைநிறுத்தியது.
லேபர் அரசாங்கம் விதித்துள்ள தடையில் F-35 போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உட்படுத்தப்படவில்லை. அத்துடன், F-35 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் உரிமத்தை நிறுத்தி வைப்பது தற்போது சாத்தியமில்லை என்றும், அதில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும் அரசாங்க செய்தித்தொடர்பளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய விதிமுறைகளின் கீழ், இனப்படுகொலையைத் தடுக்க அதன் அதிகாரத்திற்குள் அனைத்தையும் செய்ய பிரித்தானியாவிற்கு தெளிவான சட்டப்பூர்வ கடமை உள்ளது என அம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரித்தானியாவின் தலைமை நிர்வாகி சச்சா தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |