இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு! சம்பவ இடத்தின் பதறவைக்கும் வீடியோ
இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 11 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிப்படுத்தப்படவில்லை
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற வேளையில் ஹெலிகாப்டர் பெரும் விபத்துக்குள்ளாகியது.
ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
குறித்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு எனத வீரவணக்கம் pic.twitter.com/4Fe5FitBdx
— Alagu chinnaiyan (@ChinnaiyanAlagu) December 8, 2021
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
Latest video from the #IndianArmy helicopter crash incident. I really hope all on board including #bipinrawat sir are alright. Pray for everyone's wellbeing ?#HelicopterCrash pic.twitter.com/pzcB08i6o4
— Tanisha Batra (@TanishaBatra80) December 8, 2021
An Indian Air Force (IAF) helicopter carrying the Chief of Defence Staff Gen #BipinRawat, his wife and seven others crashed in #Coonoor in the #Nilgiris district on Wednesday.
— Deccan Herald (@DeccanHerald) December 8, 2021
Read: https://t.co/sXNJyviO5Y
Video: Special arrangement#HelicopterCrash #TamilNadu pic.twitter.com/Fee4u3CysR