பிரித்தானியாவில் சீருடை அணிந்த ராணுவ அதிகாரிக்கு கத்திக்குத்து. : பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவில், ராணுவ சீருடை அணிந்து இருந்த அதிகாரி பல கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
ராணுவ அதிகாரி மீது தாக்குதல்
பிரித்தானியாவில், கெண்ட் மாகாணத்தில் உள்ள பிராம்டன் படைப்பிரிவுக்கு(Brompton Barracks) அருகில் உள்ள சாலி போர்ட் தோட்டத்தில்(Sally Port Gardens) செவ்வாயன்று மாலை சீருடையில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய கெண்ட் காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு மனநலப் பிரச்சனை தொடர்பானதாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது.
சாலி போர்ட் தோட்டத்தில் உள்ள குற்றம் நடந்த இடத்திலும், அருகே ரோச்செஸ்டரில் உள்ள ஒரு வீட்டிலும் குற்றவியல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |