பனிச்சரிவில் சிக்கி புதைந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் சடலமாக மீட்பு!
இந்தியாவின் அருணச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய இராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு அருகில் உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய ராணுவ வீரர்கள் இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய மயமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலைியல் பிப்ரவரி 8ம் திகதி இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடடிவடிக்கைள் முடிவுக்கு வந்துள்ளன.
பிப்ரவரி 6ம் திகதி இமயமலையின் உயரமான கமெங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 7 இந்திய இராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.
மீட்புப் பணிகளில் உதவ சிறப்புக் குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டன, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.
தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துரதிஷ்டவசமாக, அனைவரும் சிறப்பான முயற்சிகள் மேற்கொண்ட போதும், 7 பேரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சம்பவம் நடந்த பகுதியில் கடும் பனிபொழிந்து வருகிறது.
மேலதிக நடைமுறைகளுக்காக, தற்போது 7 வீரர்களின் உடல்களும் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் உள்ள இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.