லண்டனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் இந்திய வம்சாவளி நபர்: அவர் கூறும் காரணம்
லண்டன் மேயர் சாதிக் கானின் கனவு திட்டமான ULEZ-கு எதிராக வாடகை டாக்ஸி சாரதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சாதிக் கான் ஒரு சர்வாதிகாரியாக
லண்டன் மேயர் சாதிக் கான் ஒரு சர்வாதிகாரியாக இருப்பது முறையல்ல என குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் மீது என்ன வேண்டுமானாலும் திணிக்கலாம் என சாதிக் கான் கருதுகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
CREDIT: NurPhoto
Uxbridge ரயில் நிலையம் அருகே கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார் பிரப்தீப் சிங். சுமார் 10 ஆண்டு காலம் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றியுள்ள பிரப்தீப் சிங்,
லண்டன் மேயர் சாதிக் கான் அமுலுக்கு கொண்டுவந்துள்ள ULEZ திட்டத்தால் தமது வாடகை டாக்ஸி தொழில் பாதிக்கப்படும் என்பதுடன், தாம் அடிக்கடி கோவிலுக்கு செல்வதும் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ULEZ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டால், ஆகஸ்டு 29 முதல் ஓவ்வொரு முறையும் தாம் 12.50 பவுண்டுகள் அபராதம் செலுத்த நேரிடும் எனவும், தமது வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு
ஒவ்வொரு முறையும் தாம் குடியிருப்பில் இருந்து கோவிலுக்கு செல்லும் போதும் லண்டன் மேயருக்கு 12.50 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்பது எந்த வகையில் சாத்தியம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
@reuters
லண்டன் மேயர் சாதிக் கானின் இந்த மாசற்ற லண்டன் திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தாலும், விதிகளை மீறும் கார்களை சாலையில் இருந்து அகற்ற 2,000 பவுண்டுகள் வரை இழப்பீடாக வழங்கப்படும் எனவும், நகர மக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமது உண்ணாவிரத போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக கூறும் பிரப்தீப் சிங், சாதிக் கான் லண்டன் மேயர் மட்டுந்தான். அவர் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல, அவர் விரும்பியதை மக்கள் மீது திணிக்க.
Image: Titus D'souza
மக்கள் பேச்சை அவர் கேட்க வேண்டும். 10 ஆண்டு காலம் நாட்டுக்காக சேவை புரிந்திருக்கிறேன், இந்த உண்ணாவிரத போராட்டமும் ஒருவகை போர் தான் என பிரப்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |