துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி மதிப்பிலான நகை கொள்ளை; மீண்டும் வருவோம் என மிரட்டல்
arned gang robbed 40cr worth jewels in bihar jewellery: பீகாரில் உள்ள நகைக்கடை ஒன்றில், துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்டதோடு, மீண்டும் வருவோம் என கொள்ளையன் கூறி விட்டு சென்றுள்ளான்.
பீகாரில் ரூ.40 கோடி மதிப்பிலான நகை கொள்ளை
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள சம்பாரன் பெட்டியா பகுதியில் சென்கோ என்ற தங்க மற்றும் வைர நகைக்கடை இயங்கி வருகிறது.

இன்று மதியம் 3 மணியளவில், 3 மோட்டார் பைக்குகளில் துப்பாக்கியுடன் வந்த 8 கொள்ளையர்கள் நகைக்கடைக்கு உள்ளே நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் ஓரிடத்தில் அமர வைத்து, அவர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டனர்.
இதன் பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
DAYLIGHT ROBBERY IN BIHAR! 🚨 Armed criminals looted crores worth of gold, silver jewellery and cash from a Senco Gold & Diamonds showroom in Bettiah on Wednesday afternoon. Around 6–8 armed men reportedly stormed the showroom, held employees hostage and assaulted one staff member with a gun butt when he resisted. After the massive robbery, DIG and SSP officials rushed to the spot. A shocking daylight robbery raises serious questions about law and order in Bihar. #Bihar #SencoGold #Robbery
— Indian Observer (@ag_Journalist) November 18, 2026
அவர்கள் சென்ற பின்னர், ஊழியர்கள் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பாரன் சரக டிஐஜி ஹர் கிஷோர் ராய் மற்றும் எஸ்எஸ்பி குமார் கௌதம் ஆகியோர் நகைக்கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக NDTV குறிப்பிட்டுள்ளது.
கொள்ளையர்களை அடையாளம் காண, கடையின் உள்ளேயும், சுற்றுவட்டாரபகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

அங்கிருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "மீண்டும் வருவோம், இது ஒரு ட்ரெய்லர் " என கொள்ளையன் ஒருவன் கூறியதாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இருவர் தலையில் தாக்கப்பட்டுள்ளனர்.