சட்டையால் சர்ச்சையில் சிக்கிய அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்! போருக்கு தயாராகிறேன் என ஆளுநரை கிண்டல்
அமெரிக்காவில் மறுவரையறை செய்யும் திட்டத்தை அறிவித்த ஆளுநரை கிண்டல் செய்யும் விதமாக, அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் அணிந்திருந்த டீ-ஷர்ட் சர்ச்சையாகியுள்ளது.
ஆளுநர் கேவின் நியூசம்
கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) மாவட்டங்களை மறுவரையறை செய்வதற்கான ஒப்புதலைப் பெற மாநிலத்தில் ஒரு சிறப்புத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினருக்கு மேலும் ஐந்து அமெரிக்க ஹவுஸ் இடங்களை வழங்குவதற்காக அவர் இதனை செய்வதாக கருத்து நிலவுகிறது.
இது 2008யில் நடிகரும், முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் (Arnold Schwarznegger) ஆதரவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இது தற்போதைய கட்சி சார்பற்ற மறுவரையறை ஆணையத்தை மாற்றுவதை உள்ளடக்குவதாக உள்ளது. இது எல்லைகளை வரைவதற்குப் பொறுப்பாகும்.
போருக்குத் தயாராகி வருகிறேன்
இந்த நிலையில் கேவினை கிண்டல் செய்யும் விதமாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அர்னால்டு 'நான் gerrymandering போருக்குத் தயாராகி வருகிறேன்' என்ற தலைப்பில் ஒரு எடை இயந்திரத்தைப் பயன்படுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் அணிந்துள்ள டீ-ஷர்ட்டில் "அரசியல்வாதிகளை துஷ்பிரயோகம் செய், Gerrymanderingஐ முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
ஒரு கட்சிக்கு சாதகமாக தேர்தல் எல்லைகளை கையாளுவதை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல்தான் "Gerrymandering" அர்னால்டின் இந்தப் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |