மருத்துவமனையில் உள்ள பேரறிவாளன் உடல்நிலை குறித்து தாய் அற்புதம்மாள் வெளியிட்ட முக்கிய தகவல்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அற்புதம்மாள் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் 30 நாட்கள் பரோல் வெளியே வந்தார்.
இதனையடுத்து, ஜூன் மற்றும் ஜூலை மாதம் என தொடர்ந்து இரண்டு முறை மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, நேற்று சிறுநீரக கோளாறு காரணமாக பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தடைபட்ட சிகிச்சையால் அறிவுக்கு நோய்களின் தாக்கம் தீவிரமானது.
— Arputham Ammal (@ArputhamAmmal) August 13, 2021
இந்நிலைமாற உள்நோயாளியாக சேர மருத்துவர் பரிந்துரையால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
தொடர்ந்து நலன் விசாரிப்போர்க்கு நன்றி.
தற்போதைய சிகிச்சை தடையின்றி தொடரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு !
அவரது உடல்நிலை குறித்து எந்தவித தகவலும் வெளிவராத நிலையில், உடல்நிலை குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், தடைபட்ட சிகிச்சையால் அறிவுக்கு நோய்களின் தாக்கம் தீவிரமானது.
இந்நிலைமாற உள்நோயாளியாக சேர மருத்துவர் பரிந்துரையால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
தொடர்ந்து நலன் விசாரிப்போர்க்கு நன்றி. தற்போதைய சிகிச்சை தடையின்றி தொடரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ! என அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.