இருள் நீக்கும் அன்பின் பேரொளியே! ஏ.ஆர்.ரகுமான் எழுதிய கவிதை
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்கார் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பல பாடல்களை தனது குரலில் பாடியுள்ளார்.
மரியான், ஓ காதல் கண்மணி ஆகிய இரண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள அவர், 99 சாங்ஸ் என்ற படத்திற்கு கதை எழுதி தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன் கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில் 'இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே' என குறிப்பிட்டுள்ளார்.
இருள்
— A.R.Rahman (@arrahman) June 24, 2022
நீக்கும் அன்பின் பேர் ஒளியே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை
வாழ்க்கை என்பதொரு
கனவு தானே??? pic.twitter.com/MRkuhOaD9P