பிரித்தானிய கடற்கரையில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்: 17 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவின் அயர்ஷயர் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் அயர்ஷயர் கடற்கரையில் உள்ள இர்வின் கடற்கரையில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை சுமார் 6:45 மணி அளவில், பொலிஸ் ஸ்கொட்லாந்து அதிகாரிகள் தெற்கு லானர்க்ஷயரின் கிழக்கு கில்பிரைடைச் சேர்ந்த கெய்டன் மோய்(Kayden Moy) என்ற இளைஞனை பலத்த காயங்களுடன் கண்டுபிடித்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கெய்டன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது சிறுவன் கைது
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரையில் நடந்த "குழப்பம்" வீடியோவில் பதிவாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அது தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |