கோலியை கைது செய்யுங்கள்! குவியும் பதிவுகள்... காரணம் இதுதான்
கோலியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் 24 வயதான விக்னேஷ் என்பவர் ஐபிஎல் போட்டியின் பிரபலமான மும்பை இந்தியன்ஸ் (ரோகித் சர்மா) அணியின் ரசிகர். அதே ஊரைச் சேர்ந்த 21 வயதான தர்மராஜ் ஆர்சிபி அணியின் (முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி) ரசிகர்.
இருவருக்கும் மது அருந்தும்போது கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். விக்னேஷ் என்பவர் ஆர்சிபி அணியையும் விராட் கோலி அணியையும் கேலி செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மது பாட்டிலாலும் கிரிக்கெட் பேட்டினாலும் விக்னேஷ் மண்டையில் அடித்துள்ளார். அதனால் விக்னேஷ் என்பவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தர்மராஜை கைது செய்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் விராட் கோலியை கைது செய்யுங்கள் என #Arrestkohli என்ற ஹேஷ் டேக்கின் கீழ் டுவிட்கள் வைரலாகி வருகிறது.
Well done Rohitians ?. Finally it's trending. Culprit should get unbearable punishment and Kohli should apologize and tell his fans to be in their limit?. I blamed Pigrat Chokli#ArrestKohli pic.twitter.com/uybaIjN7aG
— ?????. ? (@RofiedAsim) October 15, 2022
விராட் கோலியின் ஆக்ரோஷம்தான் ரசிகர்களும் இப்படி இருக்கிறார்களென சிலர் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த வைரலுக்கு காரணம் ரோகித் சர்மா ரசிகர்கள் எனவும் பதிலுக்கு ரோகித் சர்மாவையும் அவரது ரசிகர்களையும் விராட் கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு கோலி தீவிரமாக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ArrestKohli it's trending common rohit fans trend arrest kohli and save humanity pic.twitter.com/dPI9hgx286
— Rohit45 (@KarnarohitMahe2) October 15, 2022