என்னையும் கைது செய்யுங்கள்! மோடிக்கு எதிராக கொந்தளித்த ராகுல் காந்தி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பல்வேறு இடங்களில், நம்முடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என நரேந்திர மோடியை கேள்வி கேட்கும் விதத்தில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஐபிசி 188 பிரிவின் கீழ் 17 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீசார், 17 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, என்னையும் கைது செய்யுங்கள் என டுவிட் செய்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்தியா சுதந்திரமான நாடு என கொண்டாடுங்கள், இங்கு பேச்சுரிமை இருக்கிறது, ஆனால் பிரதமரை எதிர்த்து மட்டும் கேள்விகேட்க அல்ல என தெரிவித்துள்ளார்.
Arrest me too.
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ