ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட்
Arrest warrant for German dinghy dealer supplying small boat migrant smugglers: ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்கும் ஜேர்மன் நாட்டவர் ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் அமைந்துள்ள MaReBoote என்னும் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர், மார்வின் (Marvin Reuter).

மார்வினுக்கு எதிராக ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தான் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட இருப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார் அவர்.
புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர்
இந்த மார்வின், புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை கடத்தல்காரர்களுக்கு விற்பவர் என சந்தேகம் எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அவரது 82 படகுகள் ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோரால் பயன்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், அந்த படகுகளில் பயணிக்கும்போது, இரண்டு விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
விடயம் என்னவென்றால், மார்வினை பிரான்சுக்குக் கொண்டுவந்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும்.
ஆனால், பிரான்சுக்கு கொண்டுவரப்படுவதிலிருந்த தப்ப, நீதிமன்றத்தை நாடியுள்ளார் மார்வின்.