ஜேர்மன் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட பழங்கால தங்க நாணயங்கள்: ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்...
ஜேர்மன் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து பழங்கால நாணயங்களைத் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
1.6 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்க நாணயங்கள்
கடந்த நவம்பர் மாதம், Manching நகரிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து கி.மு 100ஆம் ஆண்டைச் சேர்ந்த 483 தங்க நாணயங்கள் திருடப்பட்டன.
அவற்றின் மதிப்பு 1.6 மில்லியன் யூரோக்களாகும்.
மதிப்பு தெரியாத திருடர்கள்
திருட்டு நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அந்த தங்க நாணயங்களைத் திருடியவர்களில் நான்கு பேர் கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். திருடியவர்கள் சிக்கியது நல்ல செய்திதான் என்றாலும், ஒரு கெட்ட செய்தியும் கிடைத்துள்ளது.
ஆம், அந்த நாணயங்கள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை என்பதை அறியாத அந்த திருடர்கள், அவற்றில் சிலவற்றை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியுள்ளார்கள்.
சுமார் 70 தங்கக் காசுகளை உருக்கி அவர்கள் 18 தங்கக்கட்டிகளாக மாற்றியுள்ள நிலையில், அவை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் ஜேர்மன் குடிமக்கள், 42 முதல் 50 வயதுடையவர்கள். அவர்களிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |