கோல் மழை பொழிந்த அணி! சுவிஸில் இமாலய வெற்றி
மகளிர் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய போட்டியில், ஆர்செனல் அணி 9-1 என்ற கோல் கணக்கில் சூரிச் அணியை வீழ்த்தியது.
ஆர்செனல் - சூரிச்
சுவிட்ர்லாந்தின் LIPO Park Schaffhausen மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்செனல் மற்றும் சூரிச் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரீடா மானும் கோல் கணக்கை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து கெய்ட்லின் 23வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
சூரிச் அணி சுதாரிப்பதற்குள் 32வது நிமிடத்தில் மானும் ஒரு கோலும், 45+1வது நிமிடத்தில் ஸ்டினா ஒரு கோலும் அடித்தனர். இதன்மூலம் முதல் பாதியில் ஆர்செனல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
Mana Iwabuchi SCORES Arsenal's NINTH GOAL of the night ??#UWCL LIVE NOW ⬇️
— DAZN Football (@DAZNFootball) December 21, 2022
?? ? https://t.co/ATDtlk2k2R
?? ? https://t.co/TD3Usq0NnS pic.twitter.com/bpcWPMm8jO
What a first-half performance ? pic.twitter.com/1nwWoFATFC
— Arsenal Women (@ArsenalWFC) December 21, 2022
மானும் 3 கோல்கள்
பின்னர் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே தனது மூன்றாவது கோலை மானும் (51) அடித்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் ஸ்டினா (54) கோல் அடித்தார்.
இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக சூரிச் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாபியென்னே ஹூம் கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 68வது நிமிடத்தில் கெய்ட்லின் கோல் அடித்தார்.
We're back underway...
— Arsenal Women (@ArsenalWFC) December 21, 2022
LET'S KEEP GOING! ✊
⚪️ 0-4 ⚫️ (46) | https://t.co/tK9rcmLS6V ? pic.twitter.com/ITKTmoC6uf
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆர்செனல் கேப்டன் ஒரு கோலும், 83வது நிமிடத்தில் அதே அணியின் மனா இவாபூசி ஒரு கோலும் அடித்தனர். ஆட்டநேர முடிவில் ஆர்செனல் அணி 9 - 1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்செனல் காலிறுதிக்குள் நுழைந்தது.
? NINE GOALS
— Arsenal Women (@ArsenalWFC) December 21, 2022
? TOP OF GROUP C
✅ 2022 COMPLETE pic.twitter.com/ACNpfcuOUN