பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களித்துள்ள கால்பந்தாட்ட கிளப்
பிரித்தானிய பொருளாதாரத்திற்கு கடந்த ஆண்டு Arsenal கால்பந்தாட்ட கிளப் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
அர்செனல் கால்பந்தாட்ட கிளப் 2022-23 சீசனில் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு மொத்தம் £616 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 22,715 கோடி) பங்களித்துள்ளது.
இதனை அர்செனல் வெளியிட்ட Economic and Social Impact Report தகவல்களில் தெரிவித்துள்ளது.
இந்த தொகையில் இஸ்லிங்டன் பெருநகரம் மட்டும் £425 மில்லியனால் பயனடைந்துள்ளது.
மேலும், அந்த சீசனில் மட்டும், பிரித்தானியா முழுவதும் 4,400க்கும் மேற்பட்ட வேலைகளும், உள்ளூர் அளவில் 1,600 வேலைகளும் அர்செனல் மூலம் உருவாக்கப்பட்டன.
அர்செனல் இன் சமூக சேவை திட்டங்கள் மூலம் 14,000 பேர் பங்குபெற்று, மொத்தம் 1,40,000 மணிநேரங்களுக்கு மேல் சமூக சேவையை பெற்றனர்.
இது குறித்து பேசிய கிளப்பின் நிர்வாக இயக்குனர் ரிச்சர்ட் கார்லிக் "அர்செனல் எங்கள் சமூகத்திற்கு கால்பந்தைத் தாண்டி பலவகையில் பங்களிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
"1886 முதல் சமூக முன்னேற்றம் எங்கள் அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சியில் அர்செனல் அதிக பங்களிப்பு செய்வதை நாம் பெருமையாகக் கொண்டாடுகிறோம்." என்று கூறினார்.
அர்செனலின் இந்த செயல், இஸ்லிங்டன் மற்றும் அதன் புறங்களின் வளர்ச்சியில் மட்டுமல்ல, அனைத்து சமூகங்களிலும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Arsenal contributed £616m to UK economy in 2022-23, Arsenal Football Club