காதலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்: யார் அந்த நடிகை?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர் காதல்
நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுர்(Samreen Kaur) உடனான தன்னுடைய காதலை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூக ஊடக பக்கத்தில் கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங்கின் இந்த பதிவு வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட பதிவில், அவர் தன்னுடைய காதலி சம்ரீனுடன் இருக்கும் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த பதிவிற்கு “My Person” என்ற எளிமையான தலைப்பையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
யார் இந்த சம்ரீன் கவுர்?
சமூக ஊடகம், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் சம்ரீன் கவுர் ஜம்மு காஷ்மீரில் 1999 செப்டம்பரில் 7ம் திகதி பிறந்துள்ளார்.

புனேவில் உள்ள Symbiosis கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCom பட்டம் பெற்றுள்ளார்.
2018ம் ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரதிநிதித்துவம் செய்து இறுதிப்போட்டி வரை சென்றார்.
மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான Nail Polish தொடர் மற்றும் “83” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |